நீட் தேர்வு பாதிப்பை ஆராயும் குழுவில் சேர்த்தமைக்கு நன்றி! முதல்வருக்கு நன்றி சொன்ன டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற  நீதியரசர் திரு ஏ.கே. இராஜன் அவர்களின்  தலைமையிலான குழுவில் ஒரு உறுப்பினராக  நியமித்த தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அக்குழுவில் ஒரு உறுப்ப்பினரும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுச்செயலாளருமான டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், "செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, தொலைபேசி மூலம் முதல் வாழ்த்தை தெரிவித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய தோழர் டி.இராஜா எக்ஸ்.எம்.பி அவர்களுக்கும்,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்களுக்கும், வாழ்த்துக்களை தெரிவித்த தோழர்கள்,நண்பர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

நீட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில்  எனது பங்களிப்பை ,அனைவரின் பங்களிப்போடு , ஆலோசனைகளோடு வெற்றிகரமாகச் செய்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr GR Ravindhranath thanks to CM for add new Committee for analyze cause of Neet Exam


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal