விவசாயம் காக்க சிறைச் சென்ற பாமகவினர்! நேரில் சென்ற அன்புமணி இராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


கடலோர மாவட்டம், கத்தாழை, கரிவெட்டி, சுப்பையா நகர், வளையமாதேவி உள்ளிட்ட இடங்களில் என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாம் சுரங்க விரிவாக்க பணி நடந்து வருகிறது.

இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், என்.எல்.சி நிறுவனத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி வரும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இப்பணியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும், என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் 28-ந்தேதி என்எல்சி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமகவினரை போலீசார் கைது செய்தனர். 

இதில், பாதுகாப்பு கருதி பாமகவினர் 20 பேரை பாளை மத்திய சிறையில் இரவு அடைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அன்புமணி ராமதாஸ், இன்று பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமகவினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி இராமதாஸ், தமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்காமல், கார்ப்ரேட் பக்கம் நிற்பதாக குற்றம் சாட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Meet in paalai prison PMK Members


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->