வரும் 19ம் தேதிக்குள் நியமன ஆணை.. "விடைத்தாள் திருத்தும் விவகாரம்".. தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 10, 11, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட அரசு தேர்வு துறை திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக 12 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதே போன்று 10-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியை மே மூன்றாம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் வரும் மே 10ம் தேதிக்குள் அனைத்து தேர்வு முடிவுகளும் வெளியிட வாய்ப்புள்ளதாக என தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் பங்கேற்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வருவதில்லை என்ற புகார் எழுந்தது. இதனை அடுத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைகள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும். தமிழ் வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும்.

தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை அனுப்ப தவறினால் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது எனவும், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு வரும் 19ம் தேதிக்குள் நியமன ஆணை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DPI order to appoint private school teachers to correct answer sheet


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->