ஒரே ஆண்டில் 20 ஆயிரம் பேரை கடித்த நாய்கள் - அதிர்ச்சி தகவல்!
Dogs bite 20 thousand people in a single year Shocking information
சென்னையில் ஒரே ஆண்டில் 20 ஆயிரம் நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஐகோர்ட்டில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வக்கீல் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் சென்னை ஐகோர்ட்டில், ராட்வீலர் போன்ற ஆக்ரோஷமான நாய்களுக்கு வாய்மூடி அணியாமல் வெளியே அழைத்துச் செல்லக் கூடாது எனக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி கால்நடை தலைமை அதிகாரி டாக்டர் கமால் உசேன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-11,630 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இதையடுத்து சென்னையில் எத்தனை நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி, கடந்த ஆண்டு மட்டும் சுமார் 20 ஆயிரம் பேரை நாய்கள் கடித்த சம்பவங்கள் நடந்துள்ளன என்றார்.
அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செய்து மீண்டும் விடுவதற்குப் பதிலாக, அவற்றை கொல்லாமல், உணவு மற்றும் பராமரிப்பு வசதிகளுடன் தனி காப்பகங்களில் வைத்திருக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.
பின்னர் தெருநாய் விவகாரம் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருவதால், மாநகராட்சி, நாய்க்கடி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு, விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
English Summary
Dogs bite 20 thousand people in a single year Shocking information