திமுக போராட்டம்.. டில்லி புறப்பட்ட புதுச்சேரி திமுக மாணவர் அணி!
DMKs struggle DMK student wing leaves for Delhi
ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி-2025 வரைவு நெறிமுறையை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெறும் திமுக மாணவரணி சார்பில் போராட்டத்தில் கலந்துகொள்ளவதற்காக புதுச்சேரி திமுக மாணவர் அணி டில்லி புறப்பட்டு சென்றது.அப்போது அவர்களை மாநில கழக அமைப்பாளர் இரா. சிவா வழியனுப்பி வைத்தார்.
ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி-2025 வரைவு நெறிமுறையை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டது . இந்த போராட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த திமுக மாணவர் அணி பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது.அந்த வகையில் இந்த போராட்டத்திற்கு புதுச்சேரி மாநில திமுக மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.பி. மணிமாறன் அவர்கள் தலைமையில் கலந்து கொள்ளும் 14 (கண்ணன், அமுதன், ஸ்டீபன் ராஜ், முத்தரசன், கெளதம் பாஸ்கரன், நரேந்திரன், விமல், அர்ஷத் வெங்கடராமன், அஷ்வினி, விஜய் விஷால், விநாயகவேலன், கீர்த்தி எழினி) மாணவர் அணி நிர்வாகிகளை புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திருமிகு இரா. சிவா அவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

இந்நிகழ்சியில் தொகுதி செயலாளர்கள் சக்திவேல், தியாகராஜன், தொகுதி பொருளாளர் சசிகுமார், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குரு @ சண்முகசுந்தரம், தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் பாலபாரதி, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் எழிலரசன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
English Summary
DMKs struggle DMK student wing leaves for Delhi