ஆகஸ்ட் 23-இல் ''எங்கள் கல்வி எங்கள் உரிமை'' தலைப்பில் கருத்தரங்கம்: திமுக மாணவர் அணி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


சென்னை  அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி, மாலை 04 மணிக்கு 'எங்கள் கல்வி எங்கள் உரிமை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி தலைமையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையின் சிறப்புகளையும் - தேசியக் கல்விக் கொள்கையின் தீமைகளையும் மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இந்த கருத்தரங்கில் மாநிலத் துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் இரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், தமிழ் கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், வி.ஜி.கோகுல், பூர்ணசங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி, ஜெ.இராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - மக்கள் நீதி மய்யத் தலைவர் - மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

குறித்த கருத்தரங்கில் கழக மாவட்ட, மாநகர ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக மாணவர் அணி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK student wing announces seminar on August 23rd titled Our Education Our Right


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->