கருணாநிதியின் 08-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் திமுக அமைதிப் பேரணி..! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 08-ஆம் ஆண்டு நினைவு தினத்​தையொட்​டி, சென்​னை​யில் வரும் 07-ஆம் தேதி அமை​திப் பேரணி நடை​பெ றஉள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்ளதாவது;

''முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் 08-ஆம் ஆண்டு நினை​வு​நாளை​யொட்​டி, திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அமை​திப் பேரணி நடை​பெறவுள்​ளது.

ஆகஸ்ட் 07-ம்ஆ தேதி காலை 08 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்​தூ​ரார் வளாகத்​தில் அமைந்​துள்ள கருணாநிதி சிலை அரு​கில் இருந்து அமை​திப் பேரணி தொடங்​கி, மெரினா கடற்​கரை வரை நடை​பெறுகிறது.

மெரினா கடற்​கரை​யில் உள்ள கருணாநிதி நினை​விடத்​தில் மலர்​வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்​தப்​படும்.

பேரணி​யில் திமுக பொதுச்​செயலா​ளர் துரை​முரு​கன், பொருளாளர் டி.ஆர்​.​பாலு, முதன்​மைச் செய​லா​ளர், துணை பொதுச்​செய​லா​ளர்​கள், முன்​னாள் அமைச்​சர்​கள், நாடாளு​மன்ற, சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள், மாவட்​டச் செய​லா​ளர்​கள் பங்​கேற்​கின்​றனர்.

எனவே, சென்னையின் திமுக நிர்​வாகி​கள், அனைத்து சார்பு அணி​களின் உறுப்​பினர்​கள் மற்​றும் பிர​தி​நி​தி​கள் அனை​வரும் தவறாமல் பங்​கேற்க வேண்​டும்.'' என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK peaceful rally in Chennai on the occasion of Karunanidhis 8th death anniversary


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->