தப்பும்மா.. காலுல எல்லாம் விழுக கூடாது! திமுகவில் இப்படியும் ஒரு எம்பி! - Seithipunal
Seithipunal


காலை தொட்டு வணங்க முயன்ற சிறுமிக்கு அறிவுரை வழங்கி கனிமொழி!

திமுகவின் பொதுக்குழு கூட்டம் நேற்று செயின் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக கட்சியின் தலைவராக ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி ஆர் பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை பொது செயலாளராக கனிமொழி, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அறிவிப்பினை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். 

துணை பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழிக்கு பல்வேறு தரப்பினரும் அரசியல்வாதிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக மகளிர் அணி சார்பாக கனிமொழி அவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு நேற்று நடைபெற்ற வாழ்த்து சந்திப்பின் பொழுது பெண் குழந்தை ஒன்று கனிமொழிக்கு புத்தகத்தை பரிசாக கையில் வழங்கிவிட்டு அவரது காலில் விழுந்தது. 

சட்டென்று விலகி கனிமொழி கோவம் குழந்தையுடன் இருந்தவரிடம் என்ன இது என கோபித்துக் கொண்டார். அந்த குழந்தையிடம் இதெல்லாம் தப்பு காலில் விழக்கூடாது என அறிவுரை வழங்கினார். பின்னர் குழந்தையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் பொருளாளராக பதவி ஏற்று கொண்ட டி.ஆர் பாலுவின் செருப்பை உதவியாளர் கையில் எடுத்து வந்து மாட்டிவிடமுயன்ற வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MP Kanimozhi video goes viral


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->