செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கு: அமலாக்கத்துறைக்கு அதிரடி உத்தர பிறப்பித்த உயர்நீதிமன்றம்! 
                                    
                                    
                                   DMK MLA Senthil Balaji case Aug chennai High court order 
 
                                 
                               
                                
                                      
                                            கடந்தாண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் திமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
 
இது குறித்த வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பதிலேயே சுமார் இரண்டு மாதம் சிக்கல் ஏற்பட்டது.
 
ஒரு வழியாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் இந்த வழக்கு விசாரணை செய்து கொண்டிருக்கிறது.
 
இந்த வழக்கில் இடையீட்டு மனுவாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த வழக்கில் தன்னை விடுக்க கோரி செந்தில் பாலாஜி தாங்கள் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க கோரி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
                                     
                                 
                   
                       English Summary
                       DMK MLA Senthil Balaji case Aug chennai High court order