நான் யார் என்றும் தெரியும் அல்லவா... எனது வரலாறு எப்படிப்பட்டது தெரியுமா?.. மு.க. ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


மக்கள் மத்தியில் நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் நடைபெற்ற "உங்கள் தொகுதியில் உங்கள் ஸ்டாலின்" தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின் பேசிய போது இதனை தெரிவித்தார். 

இது குறித்த உரையில், " திமுகவின் ஆட்சி வந்தவுடன் உங்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களில் தீர்வு காணப்பட்டு குறைகள் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியில் ஊழல் டெண்டர் விடப்பட்ட நிலையில், இந்த டெண்டர்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும். 

டெண்டருக்கு கமிஷன் கொடுத்தவர்கள் அனைவரும் இனி ஏமார்ந்து செல்ல வேண்டியதுதான். நான் நடிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கிறார். அதற்கு அவசியமும், தேவையும் எனக்கில்லை. 

தற்போது ஆட்சி முடியும் காலங்களில் எடப்பாடி பழனிச்சாமி தான் விவசாயியாக நடித்து வருகிறார். திருமணம் முடிந்த 5 மாதத்தில், அவசர நிலையை எதிர்த்து ஒரு வருடம் சிறையில் இருந்தவன் தான் மு.க ஸ்டாலின். எனது வரலாறு போராட்டங்களால் உருவாகிய வரலாறு " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin Speech at Thoothukudi Kovilpatti Election Campaign 5 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal