அடிமை vs ஆண்டை! விவாதத்தை கிளப்பியுள்ள திமுக அமைச்சர்களின் தீபாவளி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


இந்துக்களின் பண்டிகைகளுக்கு திமுகவினர் வாழ்த்து கூறுவது இல்லை. குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் விஜயதசமி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது கிடையாது. திமுகவினர் நடத்தும் தொலைக்காட்சிகளில் கூட ஹிந்து பண்டிகைகளின் பெயரை கூறுவதில்லை விடுமுறை நாட்கள் என்று குறிப்பிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 

இந்த நிலையில் தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் "இல்லங்களில் மகிழ்ச்சி ஒளிரட்டும் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் அன்பினால் இல்லங்கள் ஒளிரட்டும், உள்ளங்கள் மகிழட்டும்.. அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.. களிப்புடனும் கவனத்துடனும் கொண்டாடுவோம்" என பதிவிட்டு இருந்தார்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜரின் குடும்பம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே அரசியலில் களம் கண்டு வருகிறது. கருணாநிதி அரசியலில் வருவதற்கு முன்பே பழனிவேல் தியாகராஜனின் தாத்தா மெட்ராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி பல கட்சிகளில் இருந்தவர். கடைசியாக அதிமுகவில் அமைச்சராக இருந்து தற்போது திமுகவில் அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த இருவரும் வாழ்த்து பதிவில் இருவரும் பதிவிட்ட வாழ்த்து புகைப்படம் தற்போது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

திமுக பொருத்தவரை அடுத்த தலைமுறை தலைவராக உதயநிதி பார்க்கப்படுகிறார். அவருக்கென தனி சாம்ராஜ்யத்தை திமுகவில் உருவாக்கி வருகிறார். இதன் காரணமாக பல சீனியர் நிர்வாகிகளும் அமைச்சர்களும் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். இதனால் திமுகவிற்குள் உட்கட்சி பூசல் மறைமுகமாக இருந்து வருகிறது. செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள வாழ்த்து புகைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. ஆனால் பழனிவேல் தியாகராஜன் வெளியீட்டுள்ள வாழ்த்து புகைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெறவில்லை. இந்த நிலையில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரின் வாழ்த்து செய்தியை குறிப்பிட்டு "ஆண்டை vs அடிமை" என போட்டு உள்ள பதிவு தற்பொழுது பெரும் விவாதத்தினை கிளப்பி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK ministers deepavali wishes going to viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->