சென்னையில் திடீர் பரபரப்பு.. திமுக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் திமுக நிர்வாகி ஒருவர் ஓட ஓட வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை காந்திநகர் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகி மதன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் சில நாட்களுக்கு முன்னர்தான் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். 

நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது தேர்தல் முன்பகை காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk member murdered in chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->