ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாவட்டத்திற்கான பங்கீட்டை அறிவித்தது திமுக.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 6.10.2021, 9.10.2021 ஆகிய தேதிகளில்‌ இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடக்கி நடைபெற்று வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் வேலூர் மாவட்டத்திற்கான தொகுதி பங்கீட்டை திமுக அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 14 மாவட்ட கவுன்சிலர் பதவியில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. 

138 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk local body election vellore district list


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal