#BREAKING | தொடங்கியது திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்! டார்கெட் 2024! ஸ்டாலின் எடுக்கும் முக்கிய முடிவு! - Seithipunal
Seithipunal


திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சற்று முன்பு தொடங்கியுள்ளது.

கலைஞர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணி மற்றும் கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில், மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர்கள் செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் ஸ்டாலின் பிறப்பிப்பார் என்று தெரிகிறது.

மேலும் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்க விழாவை, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்கு முன்னோட்டம் கொடுக்கும் விதமாக மாநில கட்சி தலைவர்கள் மற்றும் தேசிய கட்சி தலைவர்களை அழைத்து பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளதாகவும், அது குறித்து இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆர்எஸ் பாரதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். 

அதில் திமுக நிர்வாகிகள் யாரும், எந்த நிகழ்ச்சிக்கும் பிளக்ஸ் பேனர், கட் அவுட் வைக்க கூடாது என்றும், மீறி வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்று தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK District Member meet march 2023 MKStalin


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->