கோயம்பேட்டில் தேமுதிக தொண்டர்கள் திடீர் சாலை மறியல்..!! - Seithipunal
Seithipunal



தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என போலீசார் அறிவித்துள்ளனர்.

இறுதி சடங்கில் கூட்ட நெரிசலை தவிர்க்க விஜயகாந்தின் உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், கட்சி பிரமுகர்கள், அரசு பிரமுகர்கள் என 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்து போலீஸ் தரப்பில் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பாஸ் வைத்திருக்கும் 200 பேர் மட்டுமே இறுதிச்சடங்கை பார்க்க அனுமதி அளிக்கப்படுவார்கள் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.


இறுதிச்சடங்கில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட சூழலில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகிய 2 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்கிடையே தற்போது இறுதிச்சடங்கில் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தமறுத்ததால் 
கோயம்பேடில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகம் முன்பு திரண்டிருந்தஅக்கட்சி  தொண்டர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த தேமுதிக தொண்டர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK members road strike suddenly in koyambedu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->