நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலம்..புத்தாடை அணிந்து மக்கள் உற்சாகம்! - Seithipunal
Seithipunal



நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். 

இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று மக்கள் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடடி வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலையிலேயேபெரும்பாலான மக்கள் காலையில் எழுந்து நீராடிவிட்டு பூஜைகள் செய்து, புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கோவில்களுக்கு சென்றும் பலர் வழிபாடு செய்கின்றனர்.

மதுரை மீனாட்சியம்மன், தஞ்சை பெரிய கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம். மேலும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பட்டாசு வெடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒருசில இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இதேபோல் உலகம் முழுவதிலும் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Diwali festival celebrations are happening all over the country People are excited wearing new clothes


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->