உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.. பரிசோதனை முறைகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்!
District Collector personally observed the testing procedures at Stalins project camp with you
உதகையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பாரேவையிட்டு ஆய்வு செய்தார்.
நீலகிரிமாவட்டம், உதகை வட்டம் நஞ்சநாடு ஊராட்சிக்குட்ட பகல்கோடு மந்து சமுதாய கூடத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில், முகாமில் அரசுதுறை அரங்குகள் அமைந்துள்ள இடம் தொடர்பாக அறிவிப்பினை தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனவும், பல்வேறு அரசுதிட்டங்களின் சார்பாக வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்குமாறும் கூறினார் ,
மேலும் முகாமில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம் தொடர்பான அறிவிப்பினை தொடர்ந்து தெரிவிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெற்று அதனை பதிவு செய்ய வேண்டும் எனவும், இம்முகாமில் வழங்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் எனவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களிடையே தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அதனைதொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், "உங்களுடன் ஸ்டாலின்” திட்டமுகாமில், சுகாதாரத் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறைகளை நேரில் பார்வையிட்டும், இ சேவை மையம், ஆதார் கார்டு பிரிவு மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட (KMUT) அரங்கம் உள்ளிட்ட அரசுத்துறை அரங்கங்களையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது, உதகை வட்டாட்சியர் சங்கர் கணேஷ், உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
English Summary
District Collector personally observed the testing procedures at Stalins project camp with you