சீமானால் ஏமாற்றப்பட்டோம்.. பிரபல இயக்குநரின் பரபரப்பு ட்விட்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் நெருங்கி வரும் சூழலில் பல அரசியல் கட்சி நிர்வாகிகள் மாற்று கட்சிக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். 

அதிமுகவை சேர்ந்த பல முன்னாள் நிர்வாகிகள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அதே போன்று பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை ஏற்று அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய செந்நியன் காந்தி கணேஷ் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தனர். 

இந்நிலையில் பகிரி, பெட்டிக்கடை, தமிழ் குடிமகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபலமான இயக்குநர் இசக்கி கார்வண்ணன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "கல்வி முடித்து நாம் தமிழர் கட்சியை நோக்கி வந்த செம்பியன் காந்தி கணேஷ் போன்றோர் சீமானால் ஏமாற்றப்பட்டவர்கள். இன்று அதிமுகவில் சுதந்திரத்திற்கு பிறகு பின் முதன்முதலாக அதிகாரம் உள்ள ஒரு கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்று உள்ள எடப்பாடியாரை அனைத்து தமிழர்களும் ஆதரிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director isaki tweet we are cheated by ntk Seeman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->