மருத்துவ ஆய்வக பட்டயப்படிப்பு பயிற்சிக்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்! சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி.! - Seithipunal
Seithipunal


மருத்துவ ஆய்வக பட்டய படிப்பு பயிற்ச்சிக்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2021 - 2022ஆம் ஆண்டிற்கான மருத்துவ ஆய்வக பட்டய படிப்பு பயிற்ச்சிக்கான மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.  இப்பயிற்ச்சிக்கான கல்வித்தகுதி மற்றும் இதற விவரங்கள், பயிற்சியின் பெயர் கல்வித்தகுதி, குறைந்தப்பட்ச மதிப்பெண்கள் மற்றும் வயது சேர்க்கை எண்ணிக்கை பயிற்சிக் காலம் பயிற்சி மொழி மாதக் கல்விக் கட்டணம்.

மருத்துவ ஆய்வக பட்டய படிப்பு பயிற்சி (Diploma in medical laboratory technology course )

அ) + 2 தேர்ச்சி

ஆ) இயற்பியல்,வேதியியல் மற்றும் உயிரியல் (அல்லது) இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவிரவியல் (அல்லது) வாழ்க்கை தொழிற்கல்விப் பிரிவில் மருத்துவ ஆய்வுக்கூட நுட்புநர் தொழில் பயிற்சி

இ )17வயதுக்கு மேல் 32 வயதுக்குள் உள்ளவர்கள்.

 ஈ) தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்கள் 37 வயது வரை (31/12/2021 தேதியின் படி) 30   2 ஆண்டுகள் ஆங்கிலம் ரூ.700/-  

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை- 600081 ல் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் ரூ. 50/- ஐ பணமாக செலுத்தி விண்ணப்படிவத்தை 14/05/2022 முதல் 21/05/2022 வரை (ஞாயிற்றுகிழமை தவிர) காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.   

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 21/05/2022 மாலை 4.30 மணிக்குள். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

தகுதியும், விருப்பமும் உள்ள மாணவ, மாணவிகள் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக பட்டய படிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Diploma in medical laboratory technology course


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->