சிறைக்குள் பழக்கம்.. 3 முட்டா பீஸ்கள் சேர்ந்து திருட்டு.. கைரேகையை வைத்து கொத்தாக தூக்கிய காவல்துறை.! - Seithipunal
Seithipunal


கைரேகை மூலமாக தீரன் பட பாணியில் வீடுகளில் கொள்ளை அடிக்கும் தமிழ்நாட்டு கும்பலை வேடசந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சத்திரப்பட்டி பகுதியில், கடந்த 17 ஆம் தேதியன்று சேகர் என்பவரின் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது. இந்த விஷயம் தொடர்பாக வேடசந்தூர் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், புகாரின்பேரில் வேடசந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கும்பலின் கைரேகையை காவல்துறையினர் சேகரித்த நிலையில், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மூவரும் கரூரை சேர்ந்த ரத்தினகிரீஸ்வரன், குணசேகரன் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பது தெரியவந்துள்ளது. 

விசாரணையில், மூவரும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் இருந்த நிலையில், இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்பின் திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள வீடுகளில் கொள்ளையடித்து வருவதை வழக்கமாகவும் வைத்துள்ளனர். 

கரூரிலிருந்து லாரியில் மணல் அள்ளிக் கொண்டு, பிற மாவட்டங்களில் இறக்குவதற்காக செல்லும் வழியில், அங்கு சாலையோரம் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, மணலை இறக்கிவிட்டு ஊர் திரும்பும்போது நோட்டமிட்ட வீடுகளில் பணம் மற்றும் நகை கொள்ளை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். 

இதனைப்போன்று திண்டுக்கல்லில் மணல் லோடு இறக்க வந்த நபர்கள், சேகர் வீட்டில் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் மூவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான தனிப்படை காவல் துறையினருக்கு, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களின் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Robbery Gang Arrest by Dindigul District Police Peoples happy 22 Feb 2021


கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..Advertisement

கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..
Seithipunal