#JustIn: தள்ளாடும் வயதில் சரமாரி துப்பாக்கிசூடு.. பழனி வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் பரபரப்பு செயல்.. உயிர்கள் ஊசல்.! - Seithipunal
Seithipunal


பழனியில் பட்டப்பகலில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வள்ளுவர் திரையரங்கின் உரிமையாளர் நடராஜ். இவர் தற்போது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. 

ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான முன்விரோதத்தில், இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அப்பர் தெருவில் பட்டப்பகலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சுப்பிரமணியம் மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு நபர்களை துப்பாக்கியால் சுட்ட நடராஜ், மூன்றாவது நபரை நோக்கி குறிபார்த்து சுட முயற்சிக்கையில், அவர் கையில் இருந்த கட்டை மற்றும் கீழே கிடந்த கற்களை எடுத்து எறிந்து துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பியுள்ளார். 

இதுதொடர்பான பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும், இதுதொடர்பான தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது மூன்றாவது துப்பாக்கிச்சூடு திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது. இதனால் தமிழகத்தில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்து வருவதாக அச்சம் எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul Palani Valluvar Theater Owner Gun fire in his House due to Land Problem


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->