புதையல் ஆசையை நம்பி நடுத்தெருவுக்கு வந்த தொழிலதிபர்.. போலி ஜோஷியின் ஜோலிகள்.! - Seithipunal
Seithipunal


தங்க புதையல் எடுத்து தருவதாக தெரிவித்த போல ஜோதிடரை நம்பி, உடம்பில் துணி இல்லாமல் பூஜை செய்து ரூ.22 இலட்சம் பறிகொடுத்த தொழிலதிபரின் தகவல் தெரியவந்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அரியபித்தன்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி தங்கவேல். இவர் தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி, திருப்பூர் மாவட்டம் கணியூரில் வசித்து வந்த ஜோதிடர் சசி குமார் என்பவரை அணுகியுள்ளார். 

இதனையடுத்து, தங்கவேலின் வீட்டிற்கு வந்த சாமியார் சசிகுமார் பூஜை செய்த நிலையில், பூஜை கட்டணமாக ரூபாய் 2 இலட்சம் வரை பெற்றுள்ளார். இதுமட்டுமல்லாது, புதையல் எடுத்து கொடுப்பதில் தான் கில்லாடி என்றும், சில வீடியோக்களை சசிகுமாரிடம் காண்பித்து கதைகட்டிய நிலையில், இரண்டு நாட்கள் கழித்து சசிகுமார் மீண்டும் தங்கவேலின் வீட்டிற்கு வந்த தங்களின் தோட்டத்தில் புதையல் இருக்கிறது என்று கூறியுள்ளார். 

மேலும், அதனை எடுத்து தருவதாக ஆசை வார்த்தை கூறிய நிலையில், அதற்கு மீண்டும் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி ஆசையாக பேசியுள்ளார். ஏற்கனவே தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கவலையடைந்த இருந்த குடும்பத்தினர், புதையல் ஆசையை நம்பி பூஜைக்கு பணம் கொடுத்துள்ளனர். அந்த வகையில், மொத்தமாக ரூபாய் 24 இலட்சம் வரை தங்கவேலிடம் இருந்து சசிகுமார் பெற்றுக் கொண்டார். 

மேலும், தங்கவேலுவின் மனைவி மற்றும் மருமகளிடமும் புதையல் தொடர்பாக பேசி 40 சவரன் நகைகளையும் பெற்றுள்ளார். புதையல் இருப்பது போல கதையை தொடர்ந்து பேசி அவர்களிடம் இருந்து கார், விலைஉயர்ந்த மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றையும் வாங்கியுள்ளார். குறிப்பிட்ட நாட்கள் பொறுத்திருந்த தங்கவேல் எந்த புதையல் கிடைக்காததால் சசிகுமாரை சந்தித்து பேசவே, புதையல் கிடைக்காவிட்டால் நகை, பணம், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை தந்து விடுவதாக கூறியுள்ளார். 

இதனையடுத்து, வீட்டிற்கு சிலருடன் வந்த சசிகுமார், தங்கள் வீட்டில் உள்ள ஒருவரை உடலில் துணி இல்லாமல் பூஜை செய்ய வேண்டும் என்று பூஜையும் செய்த நிலையில், கொடுத்த பணம் மற்றும் பொருட்களை திருப்பி கேட்டால் மாந்திரீகம் செய்து கை, கால்களை செயல்படாமல் கட்டிபோட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

இதனால் தங்கவேலின் உறவினர்கள் சிலர் சசிகுமாரை சந்தித்து பணம், நகைகள் உட்பட பிற பொருட்களை கேட்ட நிலையில், கார், மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் இரண்டு இலட்சம் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. போலி ஆசையை நம்பி நடுத்தெருவுக்கு வந்த தங்கவேல், பணம் மற்றும் நகைகளை மீட்டு தரும்படி காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார். 

காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யாமல் கிடப்பில் போட்ட நிலையில், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. இதில், சசிகுமார் மீது மோசடி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஜோதிடர் சசிகுமாரை கைது செய்தனர். அவருடன் வந்து தங்கவேலை மிரட்டிய நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Business Man Cheated by Fake Joshiyar Name of Treasure 14 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->