தர்மபுரி: அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு.! - Seithipunal
Seithipunal


அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் முதல்வர் தீடீரென காவல் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை செய்தார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய நகரங்களுக்கு சென்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வருகிறார். நேற்று இரவு சேலத்தில் இருந்து தருமபுரி செல்லும் வழியில் உள்ள அதியமான்கோட்டையில் முகாமிட்டு இருந்தார். 

இதன்போது, தனது தந்தை மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால், அத்தியமான்கோட்டை காவல் நிலைய கட்டிடப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு நிறைவு பெற்று திறந்து வைக்கப்பட்டதை நினைவுகூர்ந்த முதல்வர், காவல் நிலையத்திற்கு சென்று பார்க்க முடிவு செய்துள்ளார். 

இதனையடுத்து, நேற்று இரவு திடீரென அத்தியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். மேலும், தந்தை பெயரில் உள்ள கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Adhiyamankottai Police Station Visited by TN CM MK Stalin 30 Sep 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->