வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியீடு!
Details of those removed from the voter list released
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.இந்தப் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 1-ந்தேதி, பீகாரில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில்,வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது அதில், 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாய சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.அப்போது இந்த வார தொடக்கத்தில் இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் வெளியிட நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இதுதொடர்பான அறிக்கையை 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தினர்.
மக்கள் தெளிவு பெறவும், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாகவும் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை தேவை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தி ஏழு நாட்களுக்குள் ஆதாரத்துடன் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Details of those removed from the voter list released