திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாமா?..! மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரமணமாக தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தளங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த 15 ம் தேதி முதல் தளர்வுகள் அளிக்கப்படு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்துக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து நூற்றுகணக்கான பக்தர்கள் வருகைபுரிவர்.

கொரோனா பரவல் காரணமாக  கடந்த ஏப்ரல் முதல் தடை விதிக்கப்படிருந்தது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டதால் பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என பக்தர்கள் எதிர்பாத்திருந்தனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பவுர்ணமி கிரிவலதுக்கு தடை விதிக்கப்படுள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள செய்தி குறிப்பில்,

மாவட்டத்தில்  கொரோனா பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுபடுத்துவது அவசியமாகிறது. இதனால், பவுர்ணமி தினம் (இன்று) காலை 6 மணி முதல் 21 ஆம் தேதி இரவு 12 மணிவரை திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்படுள்ளது.

மேலும், பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் எனவும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இந்த மாதம் கிரிவலம் செல்லலாம் என உற்சாமாக இருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Denial of permission to devotees to go to Kiriwalam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->