5-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! விருதுநகரில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து!
Death toll rises to 5 Fireworks factory explosion in Virudhunagar
விருதுநகரில் காரியாப்பட்டி அருகே வடகரையில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த ஆலை ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமானது.இன்று தொழிலாளர்கள்,இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி சத்தம் காதை பிளக்கும் அளவிற்கு இருந்ததாக தெரிவிக்கின்றனர்.மேலும், இந்த வெடிவிபத்தில் 2 பேர் அநியாயமாக பலியாகினர். அதுமட்டுமின்றி,3 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும், விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள்,படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே,விபத்தில் சிக்கிய கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பட்டாசு ஆலையின் மேற்பார்வையாளர், போர்மேன் ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர். இந்நிலையில் இன்று, பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த முருகன் என்பவரும் உயிரிழந்தார். இதில் சவுண்டம்மாள், கணேசன்,கருப்பையா, பேச்சியம்மாள் ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்தனர். இதனால், இந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை ஐந்தை எட்டியது.
English Summary
Death toll rises to 5 Fireworks factory explosion in Virudhunagar