ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஆடி!! குதூகலித்த அதிமுகவினர்!! 2 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியில் நடனம்!! - Seithipunal
Seithipunal


கடந்த, டிசம்பர் 5, 2016 அன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவு நாள் டிசம்பர் 5 2018, நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று அதிமுகவை சேர்ந்த பலர் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். 

மேலும், பல நகரங்களில் அன்னதானம் போன்றவற்றை வழங்கியும் சிறு, சிறு நிகழ்ச்சிகள் நடத்தியும் அதிமுகவினர் நினைவு நாளை அனுசரித்தனர். இவ்வாறு இருக்க ஜெயலலிதாவின் நினைவு விழா ஒன்றில் அதிமுகவை சேர்ந்த ஒரு பெண் மற்றும்  ஆண் இருவர் சேர்ந்து, 'ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து' என்ற பாடலுக்கு ஒருவரை ஒருவர் உரசியும், மேலே சாய்ந்தும் நடனம் ஆடினர். 

அவ்வாறு நடனம் ஆடிய இருவரும் பொறுப்பாளர்கள் போல காட்சியளிக்கின்றனர். இதனால், திமுக போன்ற எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மிகவும் மோசமாக அவர்களை விமர்சித்து இணைய தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

English Summary

dance in admk function


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal