சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு தலைமை நீதிபதி மற்றும் 65 நீதிபதிகள் என்று மொத்தம் 66 நீதிபதிகள் பணி புரிந்து வந்தனர். இந்த நிலையில், தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா கடந்த மே 23 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவன் நியமனம் செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் காலியாகவுள்ள இரண்டு நீதிபதி இடங்களுக்கு புதிய நீதிபதிகள் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, சென்னை பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனால், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி இடம் கலியானதாக அறிவிக்கப்பட்டது. உடனே அந்த இடத்திற்கு புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

d krishnakumar appointed chennai high court chief justice in chennai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->