'டிடிவி தினகரன் என் சட்டையை பிடித்து ராஜினாமா செய்ய வைத்தார்' - பரபரப்பை கிளப்பும் பேட்டி! - Seithipunal
Seithipunal


டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தாவது, "ஓ பன்னீர்செல்வம்-டிடிவி தினகரன் சந்திப்பு அதிமுகவின் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஓபிஎஸ் உடன் இருப்பவர்களுக்கு தான் தாக்கத்தை ஏற்படுத்தும். 

யார் இந்த ஓபிஎஸ்? 2001 வரை ஓபிஎஸ்-யை யாருக்கும் தெரியாது. டிடிவி தினகரானால் உருவாக்கப்பட்டவர் தான் ஓ பன்னீர்செல்வம். அம்மாவால் உருவாக்கப்பட்டவர் அல்ல. இந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு ஓபிஎஸ் என்ற பெயரை கொடுத்து, அடையாளத்தை கொடுத்தது, சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி, அமைச்சர், முதலமைச்சராக ஆக்கியது அனைத்தும் டிடிவி தினகரன் தான்.

டி டி வி தினகரன் சசிகலாவிடம் கூறி, சசிகலா அம்மாவிடம் தெரிவித்து ஓபிஎஸ்-யை ஆளாக்கினார்கள். எதற்காக அவர்களுக்கு ஒரு கை பாவையாக ஒரு ஆள் வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவர்தான் ஓ பன்னீர்செல்வம்.

ஓபிஎஸ் அம்மாவின் விசுவாசி கிடையாது. அவரே அதனை சட்டமன்றத்தில் தெளிவாக கூறியிருக்கிறார். நான் கருணாநிதியின் வசனத்தை மனப்பாடம் செய்து வைத்து, அழகு பார்ப்பேன் என்று, தன் வாயாலயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

அவர் எந்த காலத்திலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசி இல்லை என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

டிடிவி தினகரன் யார்? சசிகலா யார்? இன்று நான் தினகரனை சந்தித்து இருக்கிறேன், நாளை திருமதி சசிகலாவை சந்திப்பேன் என்று சொல்லுகின்ற இந்த ஓ பன்னீர்செல்வம் என்றைக்காவது, தனக்கு பதவி வழங்கிய இந்த இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்திருக்கிறாரா? யாருக்காவது விசுவாசமாக இருந்திருக்கிறாரா? தன்னுடைய குடும்பத்திற்காவது விசுவாசமாக இருந்தாரா? என்பதை அவரின் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டால் தான் தெரியும். அவர் யாருக்கும் விசுவாசமாக இருந்ததில்லை.

இதுதான் ஓ பன்னீர்செல்வத்தின் உண்மையான முகம். அவர் யாருக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. தன்னை சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக அமர வைத்த டிடிவி தினகரன், திருமதி சசிகலாவையும் ஓபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?

அம்மாவின் மறைவிற்குப் பிறகு ஓ பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக ஏற்றுக்கொள்ள சொன்னார்கள், ஏற்றுக் கொண்டோம். பிறகு சசிகலா குடும்பத்திற்கும் ஓ பன்னீர்செல்வத்திற்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், இவரே சொன்னார், 'டிடிவி தினகரன் என் சட்டையை பிடித்து ராஜினாமா செய்ய வைத்தார்' என்று ஓ பன்னீர்செல்வம் சொன்னார்.

இதனை நாங்கள் சொல்லவில்லை. ஓ பன்னீர்செல்வம் தான் கூறினார். இன்றைக்கு பேசுகின்ற இதே வாய்தான் அன்றைக்கு அதையும் கூறியது.

சசிகலாவை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பரிந்துரை செய்தது இதே ஓபிஎஸ் தான். பிறகு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேரடியாக தர்ம யுத்தத்தை தொடங்கினார்.

யார் முதலில் இந்த இயக்கத்தை பிளவு படுத்தியது. நாங்கள் செய்தோமா? எடப்பாடி பழனிச்சாமி பிளவுபடுத்தினாரா? ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் யாரை எதிர்த்து மேற்கொண்டார். இதே சசிகலாவையும், தினகரனையும் எதிர்த்து தான் தர்மயுத்தம் தொடங்கினார். அதனால் இந்த இயக்கம் பிளவு பட்டது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இன்று வரை நடக்கின்ற இந்த பிரச்சனைக்கு காரணம் ஓபிஎஸ் தான்.

அம்மாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நாங்கள் யாரும் கூறவில்லை. அம்மாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது இந்த சசிகலா குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாகவும் ஓ பன்னீர்செல்வம் தான் தெரிவித்தார். சசிகலாவும் தினகரன் கொலைகாரர்கள் என்று கூறியது ஓபிஎஸ் தான்.

சசிகலாவும், டிடிவி தினகரன், ஓபிஎஸ் சேர்ந்து 30 ஆண்டு காலமாக இந்த கட்சியை கொள்ளையடித்து அனுபவித்து வந்தார்கள். அது இப்போது நடக்கவில்லை. மீண்டும் கட்சியை கொள்ளை அடிப்பதற்காக ஒன்று சேர்ந்து உள்ளார்கள்.

அகராதியில் பச்சோந்தி என்ற பெயரை எடுத்துவிட்டு ஓ பன்னீர்செல்வம் என்று சூட்டி விடலாம். பச்சோந்தியை விட பல நிறங்களில் மாறக்கூடியவர் இந்த ஓ பன்னீர்செல்வம்.

அன்றைக்கு சசிகலாவையும், டிடிவி தினகரனையும் அதிமுகவில் மீண்டும் சேர்க்க கூடாது என்று நிபந்தனை விதித்தவர் ஓபிஎஸ். அப்போதுதான் உங்களோடு சேர்ந்து செயல்படுவேன் என்ற நிபந்தனையும் அவர் விதித்து, துணை முதலமைச்சர் ஆக பதவியை ஏற்றுக்கொண்டு, தானும் தன் குடும்பமும் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்து உள்ளார்" என்று சிவி சண்முகம் தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CV Shanmugam Say About OPS TTV Sasikala may 2023


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->