தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்ததன் எதிரொலியாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்களின் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 

தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட்டங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை தற்போதைய ஊரடங்கு அப்படியே தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஜூலை 6 முதல் வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம். ஜூலை 6 முதல் உணவகங்களில் குளிர்சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

மதம் சார்ந்த கூட்டங்கள், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு தடை நீடிப்பு. சுற்றுலாத் தலங்களுக்கும் தடை நீட்டிப்பு. சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதி பெற்று இறைச்சி கடைகள் செயல்படலாம்.

பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை நீட்டிப்பு. ஆன்லைன் வழிக்கல்விக்கு தடையில்லை. மாவட்டங்களுக்குள் அரசு, தனியார் பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 15 வரை தடை. தமிழகத்தில் ஜூலை 5, 12 மற்றும் 26-ந் தேதிகளில் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு.

மேற்கு வங்கம், மணிப்பூர், மகாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து 4வது மாநிலமாக தமிழகத்திலும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

curfew in tamil nadu till july 31


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal