பொதுமக்கள் குறைகேற்பு கூட்டத்தில் சமையல் வீடியோ பார்த்த அரசு பெண் அதிகாரி..! - Seithipunal
Seithipunal


ஆட்சியர் கலந்துகொண்ட பொதுமக்கள் குறைகேற்பு கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதி திராவிட நலத்துறை பெண் அதிகாரி சமையல் குறிப்பு பார்த்தது சர்ச்சையாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில், 7 மாதங்களுக்கு பின்னர் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். 

இந்த கூட்டத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை பெண் அதிகாரியும் வந்த நிலையில், கூட்டம் தொடங்கியதில் இருந்தே பொதுமக்களின் கோரிக்கைகளை கவனிக்காமல் செல்போனை பார்த்தவாறு இருந்தார். மேலும், அவர் யூடியூபில் சமையல் குறிப்பு வீடியோக்களை பார்த்துக்கொண்டு இருந்தார்.

கூட்டம் தொடங்கிய நேரத்தில் இருந்து முடியும் நேரம் வரை அதனை பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், கூட்டத்திற்கு வந்த பொதுமக்களும், அதிகாரிகளும் அதனைக்கண்டு முணுமுணுத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cuddalore District Collector Public Meeting Govt Officer See Video on Cooking Tips


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->