கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து : உரிமையாளர்களான கணவன், மனைவி கைது.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், சிவனார்புரத்தில் தனியார் பட்டாசு குடோன் ஒன்று இயங்கிவந்துள்ளது. இன்று மாலை சுமார் 5.30 மணி அளவில் இந்த பட்டாசு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, மொத்த கட்டிடமும் சுக்குநூறாக தரைமட்டமானது.

மேலும் இந்த பட்டாசு குடோனில் பணிபுரிந்து வந்த 9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பெண் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

மேலும், படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக பொதுமக்கள் மருத்துவமனைக்கு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை  அணைத்தனர்.

இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கில் ஆலையின் உரிமையாளராக இருந்த சேகர் மற்றும் அவரது கோசலா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore crackers factory accident owners arrested


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->