குழந்தையின் பிறந்தநாளை சிறப்பிக்க திட்டம்.. தாயும், மகனும் பிணமாக மீட்கப்பட்ட சோகம்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் மா.கௌகுடி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மகளிர் சுய உதவி குழுவில் பணியாற்றி வருகிறார். அங்குள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா. 

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து உள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஒரு வயதுடைய மீனலோசினி என்ற பெண் குழந்தை இருக்கிறது. 

இந்த குழந்தையின் பிறந்தநாள் இன்னும் சில நாட்களுக்குள் வரவுள்ள நிலையில், குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட தம்பதிகள் இருவரும் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், தாயும் குழந்தையும் வீட்டில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இவர்கள் இருவரும் எப்படி இறந்தார்கள்? இவர்களின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குழந்தையின் பிறந்தநாளையும் கொண்டாட முடிவு செய்துள்ள நிலையில், தாயின் தற்கொலையும், குழந்தையின் கொலையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cudallore mother and child baby Suspected death police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal