விஸ்வரூபம் எடுக்கும் மதுரை கலெக்டர் விவகாரம்! தமிழக அரசுக்கு கண்டனம்!  - Seithipunal
Seithipunal


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசின் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"மதுரை மாவட்ட ஆட்சியர் திரு நாகராஜன் மாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. மாவட்ட ஆட்சியர்களை மாற்றுவது அரசின் கடமைப் பொறுப்பு. எனினும் ஆட்சி நிர்வாகத்தில் அரசியல் தலையீடு காரணமாக ஆட்சிப்பணி அதிகாரிகள் மாற்றப்படுவது நிர்வாகக் கட்டமைப்பை நிலைகுலைத்து விடும். நேர்முகத் தேர்வு முடத்து கிடப்பில் போட்டு வைத்திருந்த அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்தை செய்தததைத் தொடர்ந்து ஆளும் கட்சியினர் கொடுத்த அரசியல் அழுத்தம் காரணமாக மாவட்ட ஆட்சியர் மாற்றம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முறை மாவட்ட ஆட்சியர்களை மாற்றி, மாற்றி நியமனம் செய்துள்ள அரசின் நடவடிக்கைகள் ஆழமான சந்தேகங்களை உருவாக்கி உள்ளது. ஆளும் கட்சியின் நிர்பந்தத்திற்கு பணியாத அலுவர்களை பணி மாற்றம் செய்து வரும் அரசின் அதிகார அத்துமீறல் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது" என அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPI condemns tamilnadu Govt for collector transfer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->