''பெயர் சூட்டும் போது நினைத்தது, நிறைவேறும் தருணமாக மாறி உள்ளது'': சி.பி.ராதாகிருஷ்ணன் தாயார் பேட்டி..!
CP Radhakrishnans mother says that what she thought when naming him has become a reality
துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வும் செய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 09-ஆம் தேதி நடக்கவுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் நட்டா அவர்கள் பரிந்துரையின் படி, தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் வெளியானதும் திருப்பூரில் உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டில் அவரது தாய் ஜானகி அம்மாள், பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம்கூறியதாவது: ''என் மகன் பிறந்த போது முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் வரவேண்டும் என, ஆண்டவனை பிரார்த்தனை செய்து பெயர் வைத்தோம். இன்று அது நிறைவேறும் தருணமாக மாறி உள்ளது.'என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிச்சயம் துணை ஜனாதிபதி தேர்தலில் என் மகன் வெற்றி பெற்று தொடர்ந்து மக்கள் சேவையை செய்வார் என்றும், இது திருப்பூருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை கூட்டக்கூடிய தருணமாக அமைந்திருக்கிறது. என் மகன் சி.பி. ராதாகிருஷ்ணன் பெயரை பரிந்துரை செய்த பாஜகவிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
CP Radhakrishnans mother says that what she thought when naming him has become a reality