#BREAKING : ரயிலில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை-புறநகர் ரயில்வே.! - Seithipunal
Seithipunal


சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க தடுப்பூசி செலுத்திய சான்றிதழை சமர்ப்பிக்க அவசியமில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தற்போது கொரோனா நோய்த் தொற்றல் வேகமாக பரவி வருகிறது. தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனையடுத்து ரயில்வே நிர்வாகம், மின்சார ரயிலில் பயணிக்க இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், ரயில் பயணிக்கும் போது வழக்கம்போல மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covid Vaccine not necessary for train


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->