தவெக நிர்வாகி மதியழகனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதி.!!
court permission to sit for madhiyazhagan into custody
கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதன் படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதிக்க கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள மதியழகனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை இரண்டு நாட்கள் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
English Summary
court permission to sit for madhiyazhagan into custody