தர்மபுரி : பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட காதல் தம்பதி.! - Seithipunal
Seithipunal


பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட காதல் தம்பதி.!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசி. இவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய திருமணம் செய்து கொணடனர்.

இதற்கிடையே, கலையரசியின் பெற்றோர் மகளை காணவில்லை என்று காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், காதல் தம்பதியினர் இருவரும் தங்கள் வெவ்வேறு சமூகம் என்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் காரிமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், அங்கிருந்த காவலர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், காதல் தம்பதியினர் இருவரும் தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று பாதுகாப்பு கேட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காதல் தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

couples dharna in dsp office in dharmapuri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->