குடும்ப தகராறால் மனமுடைந்த கட்டிட தொழிலாளி...! - தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம்...!
construction worker distraught over family dispute tragic incident suicide by hanging
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகிலுள்ள சிவலூர் கிராமம், மணங்கொண்ட அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த பாலமுருகனின் மகன் பிரபு (33), தினசரி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த உழைப்பாளி.
இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வெளிப்படையாக சாதாரண குடும்ப வாழ்க்கை போலத் தோன்றியிருந்தாலும், உள்ளுக்குள் பதுங்கியிருந்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்ததாக தெரவிக்கப்படுகிறது.

மதுவின் பிடியில் சிக்கியிருந்த பிரபு, அடிக்கடி மது அருந்தி வீடு திரும்பி வந்ததால் குடும்பத்தில் அமைதி சிதறியது. இதன் காரணமாக மனைவி சரண்யாவுடன் அடிக்கடி கடும் வாக்குவாதங்கள் வெடித்து, வீட்டின் சூழல் பதற்றமாக மாறியிருந்தது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்ததால், மன அழுத்தம் மற்றும் விரக்தி அவரை ஆட்கொண்டதாக தெரவிக்கப்படுகிறது.இந்நிலையில், வழக்கமான குடும்ப தகராறின் பின்னர் கடும் மனவேதனையில் இருந்த பிரபு, கடந்த இரவு தனது வீட்டிற்கு அருகில் இருந்த கருவேல மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகநிழலை பரப்பியதுடன், அண்டை வீட்டாரையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்த துயரச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குலசேகரப்பட்டினம் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி மேலான விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவத்தின் உண்மையான காரணங்களை கண்டறியும் நோக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக தெரவிக்கப்படுகிறது.
English Summary
construction worker distraught over family dispute tragic incident suicide by hanging