தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? அப்போ திமுக கதி?உண்மையை போட்டுடைத்து முற்றுப்புள்ளி வைத்த செல்வபெருந்தகை! - Seithipunal
Seithipunal


பீகார் தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ்–தவெக கூட்டணி உருவாகலாம் என்ற பரபரப்பை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை.

பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட கடும் தோல்வியால், தமிழகத்தில் சீட்டு பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என்ற ஊகங்கள் கிளம்பிய நிலையில், திமுகவுடனான கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பீகாரில் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள அவர், கடந்த சில ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என வாதிட்டார். வாக்குத் திருட்டு முறைகளே NDA வெற்றிக்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 2019, 2021, 2024 ஆகிய தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் தொடரும் என்றும், மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதியை மையமாகக் கொண்ட கூட்டணியை எந்த சக்தியும் வீழ்த்த முடியாது என்றும் செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக–காங்கிரஸ் கூட்டணி மாற்றமின்றி நீடிக்கும் என்பதை அவர் இந்த அறிக்கையின் மூலம் உறுதி செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress alliance with Tvk Then what about DMK Selva Perundakai who put an end to the truth


கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?




Seithipunal
--> -->