ஜூன் 1 ஆம் தேதி ஸ்தம்பிக்க போகும் மதுரை - திமுக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!
coming june 1 dmk public meeting in tamilnadu
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர். முதலில் இந்த கூட்டத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், போன் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அடுத்த மாதம் ஜூன் 1-ந்தேதி மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
English Summary
coming june 1 dmk public meeting in tamilnadu