புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - எப்போது தெரியுமா? 
                                    
                                    
                                   coming 11th local holiday in putukottai district
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்கங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியரே அறிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் தேரோட்டம் மிகவும் பிரபலமானது. 
அதனால், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவித்துள்ளார். மேலும், பொதுத்தேர்வுகள் அரசு அறிவித்த தேதிகளில் மாற்றமின்றி நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 
                                     
                                 
                   
                       English Summary
                       coming 11th local holiday in putukottai district