கொடூரம்! அம்மா,அப்பா இருவரும் மருத்துவமனையில்..மகள் வீட்டில் எடுத்த வீபரீத முடிவு!
College student hangs herself near Tambaram
தாம்பரம் அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியில் சேர்ந்தவர் நித்திய ஜீவன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி கொண்டே தனியார் கல்லூரியில் பிசிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது.
நித்திய ஜீவனின் தந்தை ஆப்ரஹாம் உடல்நிலை சரியில்லாமல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. தந்தைக்கு துணையாக தாயும் மருத்துவமனையில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நித்திய ஜீவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வேலைக்குச் சென்றும் கல்லூரிக்குச் சென்றும் வந்துள்ளார். இந்தநிலையில், நித்திய ஜீவன்க்கு அவரது தாயார் நீண்ட நேரம் செல்போனில் தொடர்பு கொண்டு அவர் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர் அருகில் உள்ள அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை தொடர்பு கொண்டு வீட்டுக்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் கதவை தட்டையும் நீண்ட நேரம் ஆகியும் நித்திய ஜீவன் கதவை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மின்விசியில் நித்திய ஜீவன் தூக்கில் பிணமாகதொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? காதல் விவகாரமா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
College student hangs herself near Tambaram