திருவள்ளூரில் கல்லூரி கனவு திட்டம்.. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆலோசனை!
College dream project in Thiruvallur District Collector M Prathaps consultation
திருவள்ளூரில் கல்லூரி கனவு திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளை உயர் கல்விக்கு சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆயத்த கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்லூரி கனவு-2025 திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படித்த மாணவ மாணவியர்களை உயர்கல்விக்கு சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆயத்த கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறை சார்பில் கல்லூரி கனவு- 2025 திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு முடித்து பள்ளி மாணவ மாணவியர்களை உயர்கல்வி சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்திடும் வகையில் பொன்னேரி கோட்டத்தில் 2 முகாம்களும், திருவள்ளூர் மற்றும் திருத்தணியில் தலா ஒரு முகாம்களும் நடத்துவதற்கான ஆயத்த கூட்டம் அனைத்து துறைகளுடன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு பெற்ற, அனைவரையும் உயர்கல்வி சேர்த்திடும் வகையில் வழிகாட்டுதல் ஏற்படுத்தித் தருவது குறித்தும், சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு உயர் கல்வியினால் ஏற்படும் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊக்கப்படுத்தி உயர்க்கல்வி சேர்ப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.மேலும், தாய், தந்தை இழந்த மாணவர்கள், பழங்குடியின மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், முகாம் மாணவர்கள், வறுமை நிலையிலுள்ள மாணவியர்கள் ஆகியோர்களை அடையாளம் கண்டு உயர்கல்விக்கு சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு பெறாத மற்றும் இடைநீற்றல் மாணவர்களை கண்டறிந்து உடனடியாக துணைத் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ ஆகிய கல்லூரியில் எந்தெந்த பாட முறைகள் இருப்பது குறித்து துண்டு பிரசுரங்கள் தயார் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். ஆகவே 12ஆம் வகுப்பு படித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அனைத்து துறை அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் பொன்னேரி சார் ஆட்சியர் ஜி.ரவிக்குமார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
College dream project in Thiruvallur District Collector M Prathaps consultation