கோவை கார் குண்டு வெடிப்பில் ஒருவர் பலி! கோவிலை தகர்க்க சதியா? - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை 4.15 மணி அளவில் மாருதி கார் வெடித்ததில் ஒருவர் பலியானார். இந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரில் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்து கார் இரண்டாக உடைந்து இருக்க கூடும் என சந்தேகித்தனர். 

ஆனால் பின்னர் வந்த தடயவியல் துறையினர் வெடித்து சிதறிய காருக்குள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடித்து சிதறிய காருக்குள் பால்ரஸ் குண்டுகளும் ஆணிகளும் அதிக அளவில் சிதறி கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக கோவையில் குண்டு வெடிப்பு நடத்த சதி திட்டம் தீட்டி இருக்க கூடும் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை உளவுத்துறையினர் தீபாவளி நேரத்தில் தாக்குதல் நடத்துவதற்கான சதித்திட்டமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் இந்து கோவிலுக்கு அருகில் கார் வெடித்துள்ளதால் கோவிலை தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனரா சந்தேகிக்கின்றனர். கோவையில் வெடித்து சிதறிய கார் பொள்ளாச்சி பதிவு எண் கொண்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த கார் நான்கு பேரிடம் கை மாறி இருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இதன் காரணமாக கோவை மாநகர் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிற மாவட்டங்களில் இருந்தும் போலீசார் கோவை மாநகருக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் காரணமாக கோவை மாநகருக்குள் பதற்றுமான சூழல் உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore car bomb blast one man killed


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->