தண்ணீர் பிரச்சனை தொடர்பாக., எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்!! - Seithipunal
Seithipunal


இந்த வருடம் பருவ மழை பொழித்து போனதால் போதிய மழை இல்லாமல் மக்கள் குடிக்க குடிநீர் கூட இல்லமல் மக்கள் தவித்துவரும் நிலையில், மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன 

இந்தநிலையில், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியது, இக்கூட்டத்தில் அதிகாரிகளுடன் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க, மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர் 

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பேசியதாவது பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் முற்றிலும் வறண்டுவிட்டன நீராதாரங்கள் வற்றி போன நிலையிலும், குடிநீர் வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் இதற்காக ரூ65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது அதிகளவில் டேங்கர் லாரிகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 

சென்னையில் நாள் ஒன்றுக்கு 9800 நடைகள் தண்ணீர், லாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டுவருகிறது. இதை மேலும் அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது - முதலமைச்சர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm talk about water issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->