தமிழகத்தில் ஒன்று கூடும் இந்தியாவின் முக்கிய புள்ளிகள்! துரைமுருகன் விடுத்த அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மார்ச் 1-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த அறிவிப்பில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மார்ச் 1ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகிய தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.


மேலும் ஒரு முக்கிய செய்தி : கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 5, 6ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை , தேனி மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin Birthday 2023 announce


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->