சென்னை: முதல்வர் ஸ்டாலினை வேதனையில் நடத்திய மரணம்!
Cm mk stalin condolence to Velachery sakthi vel
முதலமைச்சர் மு க ஸ்டாலின் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சென்னை மாவட்டம், வேளச்சேரி விஜயநகர் முதல் பிரதான சாலை, இரண்டாவது குறுக்குத் தெருவில் திரு.சக்திவேல், த.பெ.விநாயகம், வயது 47 என்பவர் இன்று (30.11.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் பெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்று மற்றும் கனமழையால் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
சக்திவேல் அவர்களின் மறைவு அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மின்சார வாரியம் சார்பாக ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ள.
English Summary
Cm mk stalin condolence to Velachery sakthi vel