முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரை பயணம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் பிரசார பொதுக்கூட்டங்களின் மூலம் வாக்குகள் சேகரித்து வருகின்றார்.

இந்த நிலையில், இன்று மாலை மதுரை நாடாளுமன்ற இந்தியா கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் சிவகங்கை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டு மதுரை பாண்டிகோவில் ரிங்சாலையில் உள்ள கலைஞர் திடலில் பிரமாண்டமான பிரசார கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மாலை 5 மணிக்கு மதுரைக்கு வந்து கார் மூலம் கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகை தருகிறார். 

அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். பொதுக்கூட்டத்தையொட்டி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் தேனி செல்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin come in madurai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->