#BREAKING: மீண்டும் ஒரு சிறுவன் அதிர்ச்சி மரணம்.. சீர்திருத்தப் பள்ளி மீது தாய் சந்தேகம்.!  - Seithipunal
Seithipunal


சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 17 வயது திருமணமான கோகுல் ஸ்ரீ என்ற நபர் படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் திடீரென உயிரிழந்துள்ளார். இவருடைய மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக கோகுல் ஸ்ரீயின் தாயார் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவரது கோரிக்கையில், "எனது மகனின் உடலில் காயங்கள் இருக்கின்றன. ஆகவே, முறையாக விசாரணை நடத்தி மகன் இறந்ததற்கு உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தின் சர்ச்சைகள் அடக்காத நிலையில் மீண்டும் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Child welfare chengalpat student Gokul Sri Death


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->